Tuesday, 28 November 2017

விமானங்கள் தரை இறங்குவது குறித்த சுவாரஸ்யத் தகவல்கள்!



விமானங்கள் மேல் எழுவதைவிட, தரை இறக்குவதுதான் பைலட்டுகளுக்கு மிக சவாலான பணியாக கருதப்படுகிறது. இதுகுறித்து சில சுவாரஸ்யத் தகவல்களை இந்த செய்தியில் காணலாம்.



விமானங்கள் தரை இறங்கும்போது வால்பகுதியைவிட முகப்பு பகுதி சற்று மேலே இருக்குமாறு தரை இறக்கப்படுகிறது. பின் சக்கரங்கள் ரன்வேயில் சரியாக தடம் பதித்து நிலைத்தன்மை பெற்ற பிறகே முன்சக்கரங்கள் தரை இறக்கப்படுகின்றன. முன்சக்கரத்தை முதலில் தரை இறக்கினால், விமானத்தின் நிலைத்தன்மை பாதித்து விபத்தில் சிக்கிவிடும்.


 விமானங்கள் தரை இறக்கப்படுவது குறித்த சுவாரஸ்யத் தகவல்கள்!

விமானம் மிக துல்லியமான மின்னணு கட்டுப்பாட்டு சாதனங்கள் மூலமாக தரை இறக்கப்படுகின்றன. அதேநேரத்தில், பைலட்டுகளுக்கு ரன்வே குறித்து குழப்பம் இல்லாமல் இருக்க வேண்டியது அவசியம்.


 விமானங்கள் தரை இறக்கப்படுவது குறித்த சுவாரஸ்யத் தகவல்கள்!


அதற்காக, ரன்வே தொடங்கும் இடத்தில் வரிசையாகவும், நெருக்கமாகவும் கோடுகள் போடப்பட்டிருக்கும். அதிலிருந்து ஓடுபாதை துவங்குவதை பைலட்டுகள் உணர்ந்து கொள்ளலாம். அதன்பிறகு, பல்வேறு அடையாளங்கள் மூலமாக தரை இறக்கும் இடம், ஓடுபாதை முடியும் இடம் உள்ளிட்டவற்றை முன்கூட்டியே கணித்து கொள்ளளாம்.

 விமானங்கள் தரை இறக்கப்படுவது குறித்த சுவாரஸ்யத் தகவல்கள்!


இரவு வேளைகளில் விமான ஓடுபாதைகளில் பல வண்ண விளக்குகள் பயன்படுத்தப்படுகின்றன. அதில், ஒவ்வொரு வண்ண விளக்கிற்கும் ஒரு சமிக்ஞை இருக்கிறது. ஓடுபாதையில் விமானத்தை சரியாக தரை இறக்க வேண்டிய இடத்தை வானில் இருந்தபடியே பைலட்டுகள் உணர்ந்து கொள்வதற்கு இது பயன்படுகிறது.

 விமானங்கள் தரை இறக்கப்படுவது குறித்த சுவாரஸ்யத் தகவல்கள்!

வெள்ளை, சிவப்பு, பச்சை விளக்குகள் மூலமாக தரை இறக்க வேண்டிய இடத்தை அடையாளம் காட்டப்படும். இரண்டு வெள்ளை விளக்குகளும், இரண்டு சிவப்பு விளக்குகளும் பயன்படுத்தப்படும் இடத்தில், விமானத்தை தரை இறக்குவதற்கான பகுதியாக பைலட்டுகள் முடிவு செய்து கொள்ளலாம்.

 விமானங்கள் தரை இறக்கப்படுவது குறித்த சுவாரஸ்யத் தகவல்கள்!

வானில் பறக்கும்போதே, இந்த விளக்குகளை வைத்து விமானத்தின் திசை, வேகம், தரை இறக்க வேண்டிய உயரம் ஆகியவற்றை கணக்கீடு செய்து கொள்ள வாய்ப்புள்ளது. மேலும், ஒன்றுக்கும் மேற்பட்ட ஓடுபாதை உள்ள விமான நிலையங்களிலும் பைலட்டுகள் விமானத்தை பாதுகாப்பாக தரை இறக்க பல அடையாள குறியீடுகளும், விளக்குகளும் பயன்படுத்தப்படுகிறது.

 விமானங்கள் தரை இறக்கப்படுவது குறித்த சுவாரஸ்யத் தகவல்கள்!

விமானம் தரை இறக்கும்போது சூறாவளி, பனிமூட்டம், மழை உள்ளிட்ட காரணங்களால் பிரச்னை ஏற்படும்போது, பைலட்டுகள் விமானத்தை தரை இறக்காமல் மேலே கொண்டு செல்வதற்கான முடிவு எடுக்கின்றனர். விமானம் தரையை தொடுவதற்கு சில வினாடிகளுக்கு முன்பு கூட முடிவு செய்து, மேலே எழுப்புவதற்கான வாய்ப்புகள் உண்டு.

 விமானங்கள் தரை இறக்கப்படுவது குறித்த சுவாரஸ்யத் தகவல்கள்!

விமானத்தை தரை இறக்கும்போது பைலட்டுகள் தரையில் பறப்பது போன்ற உணர்வை அடிக்கடி பெறுகின்றனர். இதனை கிரவுண்ட் எஃபெக்ட் என்று கூறுகின்றனர். எஞ்சின் உந்துசக்தி தரையில் அதிக விசையுடன் மோதும்போது, இதுபோன்ற உணர்வு முன்புறத்தில் அமர்ந்திருக்கும் பைலட்டுகளுக்கு ஏற்படுகிறது

https://tamil.drivespark.com/

No comments:

Post a Comment